தெலுங்கில் ரீமேக்காகும் அசுரன்: ஹீரோ இவர் தானாம்!

 

தெலுங்கில்  ரீமேக்காகும் அசுரன்:  ஹீரோ இவர் தானாம்!

100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

தமிழில்  மாபெரும் வெற்றியை தொடர்ந்து அசுரன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காகவுள்ளது. 

asuran

இயக்குநர் வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது.

asuran

இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து அசுரன் படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி மகிழ்ந்தனர். 

asuran

இந்நிலையில் அசுரன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காகிறது. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை சுரேஷ் பாபு மற்றும் கலைப்புலி எஸ் தாணு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை இயக்குவது யார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.  இதுகுறித்து விரைவில் அதிகாரபபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.