‘தெலுங்கானா என்கவுண்டர்’.. குற்றவாளிகளின் உடல்கள் மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவு

 

‘தெலுங்கானா என்கவுண்டர்’.. குற்றவாளிகளின் உடல்கள் மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவு

கடந்த மாதம் 27 ஆம் தேதி ஹைதராபாத்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி ஹைதராபாத்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ttn

அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் சென்னகேசவலு, சிவா, முகமது பாஷா மற்றும் நவீன் ஆகியோர் சிசிடிவி கட்சிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.




அதன் பின்னர் கடந்த 6 ஆம் தேதி குற்றவாளிகள் 4 போரையும் பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டருக்கு நாடே ஆதரவு தெரிவித்தும் மனித உரிமை ஆணையம் உள்ளிட்டவை இதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது. 

ttn

தெலுங்கானா என்கவுண்டர் குறித்து நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஹைதராபாத் காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ttn

அதன் படி, குற்றவாளிகள் 4 பேரின் உடலும் காந்தி மருத்துவமனை பிரேத கூடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இன்று மீண்டும் எழுந்த அந்த வழக்கில் அந்த 4 பேரின் உடல்களையும் மறுபிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.