தெலுங்கானவை உலுக்கிய பிரியங்கா ரெட்டி கொலை : 3 போலீசார் பணியிடை நீக்கம் !

 

தெலுங்கானவை உலுக்கிய பிரியங்கா ரெட்டி கொலை : 3 போலீசார் பணியிடை நீக்கம் !

 மருத்துவமனையிலிருந்து திரும்பிய பிரியங்காவை, உதவி செய்வதாக கூறி அழைத்து சென்று முகமது பாஷா உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து பிரியங்காவை அங்கேயே எரித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா, தினமும் அவரது இரு சக்கர வாகனத்தை  சின்ஷபள்ளி டோல்கேட்டில் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு பொது போக்குவரத்து மூலம் செல்வார். பிரியங்கா கடந்த 27 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அவசர வேலையாக, வழக்கம் போல  டோல்கேட்டில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். இதனை, மது போதையிலிருந்த முகமது பாஷா உள்ளிட்ட நான்கு பேர் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். 

priyanka

அவர் போன பிறகு நன்றாக திட்டமிட்டு அவரின் வண்டியைப் பஞ்சர் செய்துள்ளனர். மருத்துவமனையிலிருந்து திரும்பிய பிரியங்காவை, உதவி செய்வதாக கூறி அழைத்து சென்று முகமது பாஷா உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து பிரியங்காவை அங்கேயே எரித்துள்ளனர். காணாமல் போனதாக பிரியங்கா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் மருத்துவர் பிரியங்காவின் உடல் எறிந்த நிலையில் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் தெலுங்கானா மாநிலத்தையே உலுக்கியது. இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட சின்னகேசவலு, நவீன், முகமது பாஷா மற்றும் சிவா ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். 

ttt

இந்நிலையில், அப்பெண் காணாமல் போனதாக ஷம்ஷாபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய தாமதம் ஆக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த ஷம்ஷாபாத் காவல் ஆணையர், உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமைக் காவலர்கள் சத்ய நாராயண கவுடா மற்றும் வேணுகோபால் ஆகிய மூன்று போரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.