தெலங்கானா அமைச்சராகும் கேரள போக்குவரத்து ஐ.ஜி!

தெலங்கானா அமைச்சராகும் கேரள போக்குவரத்து ஐ.ஜி!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் ஐ.பி.எஸ்.கேரள கேடர் ஐ.பி. அதிகாரியான லட்சுமணன்.1997-ல் ஆலப்புழா கூடுதல் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கிய இவர் , திருவனந்தபுரம் எஸ்.பி,குற்றப்பிரிவு கண்காணிப்பாளர், உளவுத்துறை என்று பல்வேறு காவல்துறை பணிகளுக்கு பிறகு இப்போது கேரள மாநில போக்குவரத்து துறை, மற்றும் சோஷியல் போலீசிங் ஐ.ஜியாக இருக்கிறார்.

lakshman-ips

 46 வயதாகும் லட்சுமணனின் உறவினர்கள் தெலங்கானா ஆளும் காட்சியின் சார்பாக அரசியலில் இயங்கி வருகின்றனர். லட்சுமணனைத் தேர்தலில் நிற்கும்படி 2009,2014,2019 தேர்தலில் நிற்கும்படி அவர்கள் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.இதுவரையில் அதற்கு ஒப்புக்கொள்ளாத லட்சுமணன் இப்போது வழிக்கு வந்து விட்டதாகத் தெரிகிறது.இது சம்பந்தமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கேரள முதல்வர் பிரனாயி ராயிடம் பேசிவிட்டாராம்.

lakshman-ips

இதுபற்றி நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த லட்சுமணன், தனது உறவினர்கள் பலநாட்களாகத் தன்னை அரசியலுக்கு அழைத்து வருவதாகவும், இப்போதுதான் தான் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும்,கேரளமாநில காவல்துறை தலைவர் லோஹ்நாத் மெஹ்ராவிடம் தனது முடிவைத் தெரிவித்து விட்டதாகவும் லட்சுமணன் சொல்லி இருக்கிறார்.

காவல்துறை ஐ.பி.எஸ் அதிகாரியான லட்சுமணன் தெலங்கானா மாநில தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக நியமிக்கப் படுவார் என்று தெரிகிறது.