தெலங்கானாவில் திருடனாக மாறிய போலீசார் – பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை திருடிய அவலம்

 

தெலங்கானாவில் திருடனாக மாறிய போலீசார் – பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை திருடிய அவலம்

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை திருடனாக மாறி போலீசார் திருட முயற்சித்தால் கைது செய்யப்பட்டனர்.

கரீம்நகர்: பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை திருடனாக மாறி போலீசார் திருட முயற்சித்தால் கைது செய்யப்பட்டனர்.

தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் இரண்டு டவுன் காவல் நிலையங்களில் இருந்து 69 விஸ்கி பாட்டில்களை திருடியதாக காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு கான்ஸ்டபிள் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர். ஊரடங்கின் போது கட்டுப்பாட்டை மீறி மதுக் கடைகளை திறந்ததால் மதுபான கடை உரிமையாளர்களிடமிருந்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ttn

அவற்றை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். ஆனால் மர்மமான முறையில் அந்த மது பாட்டில்கள் காணாமல் போயிருப்பதை மூத்த போலீஸ் அதிகாரிகள் கவனித்தனர். இதைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதே காவல் நிலையத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரும், ஒரு ஓட்டுநரும் அந்த மதுபாட்டில்களை திருடியது தெரிய வந்தது. அவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அந்த மது பாட்டில்களை விநியோகம் செய்துள்ளனர். இந்நிலையில், மதுபாட்டில்களை திருடியவர்களை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.