தெலங்கானாவில் ஆம்னி பேருந்தை 100 மீட்டர் தூரம் இழுத்து சென்ற சூறைக் காற்று

 

தெலங்கானாவில் ஆம்னி பேருந்தை 100 மீட்டர் தூரம் இழுத்து சென்ற சூறைக் காற்று

தெலங்கானாவில் ஆம்னி பேருந்தை சூறாவளி காற்று 100 மீட்டர் தூரம் இழுத்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சத்துப்பள்ளி: தெலங்கானாவில் ஆம்னி பேருந்தை சூறாவளி காற்று 100 மீட்டர் தூரம் இழுத்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் ஆம்பன் புயல் தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாநிலங்களான ஒடிசாவிலும், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மே 20-ஆம் தேதி ஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு கிழக்கே 650 கி.மீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டிருக்கிறது. இதற்கிடையே தெலங்கானாவில் ஆம்னி பேருந்தை சூறாவளி காற்று 100 மீட்டர் தூரம் இழுத்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கம்மம் மாவட்டத்தில் சத்துப்பள்ளி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்னி பேருந்தை பேருந்து சூறாவளி காற்று சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதையடுத்து பின்னாலேயே இழுத்து செல்லப்பட்ட ஆம்னி பேருந்து அங்கு சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கி அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது. இதனை நேரில் கண்டவர் தனது செல்போனில் வீடியோவாக படம்பிடித்துள்ளார்.