தெற்கு ரயில்வே நிலையங்களில் குப்பைகளை வீசிய பயணிகளிடம் ரூ.4 கோடி அபராதம் வசூலிப்பு

 

தெற்கு ரயில்வே நிலையங்களில் குப்பைகளை வீசிய பயணிகளிடம் ரூ.4 கோடி அபராதம் வசூலிப்பு

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் குப்பை வீசிய காரணத்திற்காக பயணிகளிடம் ரூ.4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் குப்பை வீசிய காரணத்திற்காக பயணிகளிடம் ரூ.4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் சுத்தமான ரெயில் நிலையங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் இதற்கு ரெயில்வே நிர்வாகங்களை மட்டும் முழுமையாக குறை கூறி விட முடியாது. சுமார் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் சுத்தத்தை கடைபிடிப்பது மிகவும் நடைமுறை சிக்கலான விஷயமாகும். இருப்பினும் கூடுமானவரை விதிமுறைகளை கடினமாக்கி அதை சாத்தியமாக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

ttn

இந்த நிலையில், கடந்த 3 வருடங்களில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசிய 1 லட்சத்து 84 ஆயிரம் பயணிகளிடம் இருந்து ரூ.4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து ரெயில் நிலையங்களில் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரெயில் நிலைய வளாகத்தில் குப்பையை வீசும் பயணிக்கு அதிகபட்சமாக ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

ttn

அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளில் 2020 ஜனவரி வரையிலான காலக்கட்டம் வரை தெற்கு ரெயில்வேயில் உள்ள 6 கோட்டங்களில் ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் குப்பைகளை வீசிய 1 லட்சத்து 84 ஆயிரத்து 773 பயணிகளிடம் இருந்து 4 கோடியே 1 லட்சத்து 74 ஆயிரத்து 880 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.