தெர்மகோல் விடுவதற்கும் யோகம் வேணும்… மச்சக்கார எடப்பாடி..!

 

தெர்மகோல் விடுவதற்கும் யோகம் வேணும்… மச்சக்கார எடப்பாடி..!

இது யாகத்தால் வந்த மழையா? அல்லது எடப்பாடியின் யோகத்தால் வந்த மழையா என பட்டிமன்றம் நடத்தி வருகிறார்கள் மக்கள்.

தமிழக அரசு, மழை வேண்டி கோயில்களில் வருண யாக பூஜை நடத்தும்படி அறநிலையத்துறை சார்பில் உத்தரவிட்டது. யாகங்களும் நடந்தது. அதில் மாடு மிரண்டது, அமைச்சர் அரண்டது தனிக்கதை. எடப்பாடி

பொதுவாக, நல்ல விஷயத்துக்காக நடத்துகிற யாக பூஜையை சனிக்கிழமை நடத்த மாட்டார்கள். இந்த விஷயத்தில் ஜெயலலிதா நாள், நட்சத்திரம், நேரம் பார்த்துதான் எதையுமே அறிவிப்பார். ஆனால், திமுக போராட்டம் அறிவித்ததால் அவசரத்தில் அள்ளித்தெளித்த கோலம் மாதிரி அரசு அறிவித்தது.தண்ணீர்

 இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெர்மாகோல் அமைச்சர் யாகம் நடத்த சென்றார். அங்குள்ள அர்ச்சகர்கள், ‘சிவாலயங்களில் யாகம் நடத்த சனிக்கிழமை உகந்த நாளாகாது. ஞாயிறு நடத்தலாம்’ எனக் கூறி இருக்கிறார்கள். அதை ஏற்க அமைச்சர் மறுத்து விட்டாராம் செல்லூர் ராஜு. சனிக்கிழமை நடத்துவதின் அரசியல் பின்னணியில், திமுக ஆர்ப்பாட்டம் இருப்பதை அர்ச்சகர்களிடம் சொல்லாமல் மழுப்பி இருக்கிறார்.மழை

 அர்ச்சகர்களையும் சமாதானப்படுத்த போராடி இருக்கிறார். கடைசியில் சுவாமி சன்னதி முன் நடத்த வேண்டிய யாகத்தை இடம் மாற்றி பொற்றாமரைக்குளம் அருகில் நடத்தி முடித்தார்கள். இதன்பிறகு, ‘மதுரையில் இன்று மழை பெய்யும்’ என ஆரூடம் சொன்னார். ஆனால், வழக்கம்போல அன்றும் 100 டிகிரியை தாண்டி வெயில் சக்கைப்போடு போட்டது.  தமிழகம் முழுவதும் இந்த யாகம் நடைபெற்றது. சென்னையில் அன்றே மழை பெய்தது.  அடுத்தடுத்த நாட்களிலும் மழை பெய்து வருகிறது. இது யாகத்தால் வந்த மழையா? அல்லது எடப்பாடியின் யோகத்தால் வந்த மழையா என பட்டிமன்றம் நடத்தி வருகிறார்கள் மக்கள்.