தெருவுல சிலர் பேசுவது மாதிரி அவர் ஐ.நா. கூட்டத்தில் பேசினார்- சுப்பிரமணியன் சுவாமி கடும் தாக்கு

 

தெருவுல சிலர் பேசுவது மாதிரி அவர் ஐ.நா. கூட்டத்தில் பேசினார்- சுப்பிரமணியன் சுவாமி கடும் தாக்கு

ஐக்கிய நாடுகளின் (ஐ.நா.) கூட்டத்தில் அவர் பேசியது தெருவுல சிலர் பேசுவது மாதிரி இருந்தது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரானை கடுமையாக தாக்கி பேசினார் பா.ஜ. மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி.

நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக ரூஸ் அவென்யூ நீதிமன்றத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி நேற்று வந்து இருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது: ஐ.நா.வின் பொதுசபை  கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றியது தெருவுல சிலர் பேசுவது மாதிரி இருந்தது.

இம்ரான் கான்

மிகவும் மோசமான பேச்சு. மற்றும் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்தவர்கள் மட்டுமே அவரது பேச்சுக்கு கை தட்டினர். ஐ.நா. கூட்டத்தில் மற்ற நாட்டின் உள்நாட்டு விவகாரங்களை நீங்கள் பேச கூடாது. சர்வதேச பிரச்னைகளை மட்டுமே நீங்கள் பேச வேண்டும். ஐ.நா.வில் அவர்  பேசிய பாகிஸ்தானில் படிப்பறிவில்லாத சில மக்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கலாம். மற்றும் அதனை தைரியமாக பேச்சு என்றும் கூட வரவேற்கலாம். பாகிஸ்தான் ராணுவத்தின் அழுத்தம் காரணமாக இம்ரான் கான் அப்படி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து விஷயங்கள் குறித்தும் நன்றாக பேசினார். இவ்வாறு அவர் பதில் அளித்தார். ஐ.நா.வின் 74வது பொதுசபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அனுமதிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் கூடுதலாக 30 நிமிடங்கள் பேசினார். அவர் பேசிய 45 நிமிடங்களில் காஷ்மீர் விவகாரத்தை பற்றிதான் அதிகம் பேசினார். ஆனாலும் உலக தலைவர்கள் அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.