‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே’ …நெகிழ வைக்கும் அப்பா – மகள் வீடியோ!

 

‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே’ …நெகிழ வைக்கும் அப்பா – மகள் வீடியோ!

ஆனால் வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தோஷமான தருணங்களுக்கு பின்னணியில் நம் தந்தை இருப்பார். 

‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…தந்தை அன்பின் முன்னே’ இது மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் வரிகள். வரிகள் அவருடையதாக இருந்தாலும் இந்த பாடல் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் எனலாம். அப்பா நம் வாழ்க்கையில்  நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.  ஆனால்  அப்பாவின் அன்பு  பலருக்கும் மேலோட்டமாக பாரத்தால்  தெரிய வாய்ப்பில்லை.  ஆனால் வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தோஷமான தருணங்களுக்கு பின்னணியில் நம் தந்தை இருப்பார். 

ttn

எப்ப பார்த்தாலும் கத்திக்கிட்டே  இருக்காரும்மா… ஒருநாள் பாரேன் என்ன பண்ணப்போறேன்னு என்று டயலாக் அடிக்கும் இளசுகளுக்கு அப்பா என்பவர் என்றுமே புரியாத ஒரு புதிர் தான்.  கத்தி கொண்டே இருக்கும் அந்த கர்ஜனை ஒருநாள் நிரந்தர மௌனத்திற்குச் செல்லும் நாள்…அந்த அமைதி… உங்கள் வாழ்க்கையில் கேட்கும் மிகப்பெரிய மரண ஓலமாக இருக்கும். பொதுவாக அம்மாக்கள் தங்கள் வலியை  கண்ணீரில் வெளிப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் வீட்டில் சுனாமியே அடித்தாலும் அப்பா கடந்து செல்லும் அந்த மௌனம் ஆயிரம் வலிகளை  ஏற்படுத்தும். இப்படி அப்பாவை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம். 

அப்பாவின் அன்பு விலைமதிப்பற்றது !! pic.twitter.com/YxdDLGcW4P

— சக மனிதன் (@commonmantalks) January 13, 2020

அந்த வகையில், மாற்றுத்திறனாளியான தனது மகள் ராட்டினத்தில் விளையாட ஆசைப்பட, தோளுக்கு  மேல் வளர்ந்த மகளை தூக்கிக்கொண்டு ராட்டினத்தில் அமரவைத்து பாதுகாப்புக்காக தானும்  உடை அமர்ந்து கொள்ளும் ஒரு தந்தையின் வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த  வீடியோவை பார்க்கும்  ஒவ்வொருவரும் உங்கள் அப்பாவை ஒரு நிமிடம் நினைத்து பாருங்க பாஸ்…