தென் மேற்கு பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம்…

 

தென் மேற்கு பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம்…

தென் மேற்கு பருவமழை ஜூன் இரண்டாம் தேதி தொடங்கும் என்று சொன்னார்கள்.அதுக்கப்புறம்,இல்லை ஆறாம் தேதிதான் தொடங்கும் என்று சொன்னார்கள்.தற்போது மேலும் சில நாட்கள் தள்ளிப்போகும்

தென் மேற்கு பருவமழை ஜூன் இரண்டாம் தேதி தொடங்கும் என்று சொன்னார்கள். அதுக்கப்புறம், இல்லை ஆறாம் தேதிதான் தொடங்கும் என்று சொன்னார்கள்.தற்போது மேலும் சில நாட்கள் தள்ளிப்போகும் என்று சொல்லியிருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மய்யம்!

தென் மேற்கு பருவமழை தாமதம்.

அடிக்கிற வெய்யிலுக்கு எப்படா மழை வரும் என்று எல்லோரும் ஆவலாக  காத்துக்கொண்டிருக்கும் போது…எதனால் தள்ளிப் போகிறது !? இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் வீசும் காற்று தென் திசை நோக்கி நகரும் எனவும், அவ்வாறு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல், கேரள மாநிலத்தில் வரும் ஜூன் எட்டாம் தேதியன்று தான் ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

 பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம்.

தவிர,தற்போது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி மேகக்கூட்டங்கள் நகர்ந்து செல்வதாகவும், பருவமழைக்கான மேகக்கூட்டங்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வரும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஒடிசாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கும் எனவும் எச்சரித்துள்ளது.