’தென் மண்டலத்தை விடக்கூடாதுண்ணே…’ ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்..!

 

’தென் மண்டலத்தை விடக்கூடாதுண்ணே…’ ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்..!

மு.க.அழகிரியின் இந்த மனமாற்றம் ஸ்டாலினின் காதுகளுக்குப் போக, ‘அப்பாடா அண்ணன் எனும் போட்டி அரசியல் தொல்லை விட்டுச்சு’ என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்.

மன்னரின் வாரிசுகளால் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களையும், அதனால் ஏற்பட்ட கலவரங்களினால் மக்கள் மடிந்ததையும் வரலாற்றில் படித்திருக்கிறோம். அதை படித்தபின் இப்படியுமா? இருந்திருப்பார்கள் மன்னரின் மகன்கள்?’ என்று அதிசயிப்போம். ஆனால் இதையெல்லாம் சமகாலத்தில் நேரில் நிகழ்த்திக் காட்டியவர்கள் மு.க.அழகிரி – ஸ்டாலின் ஆகிய இருவரும்.

முதல்வர் கருணாநிதியின் மகன்களாக இருந்து கொண்டு இருவருக்குமான ஈகோ யுத்தத்தில் நடந்த மோதல்களும், அடிதடி அட்ராசிட்டிகளும் சினிமாவுக்கே சவாலானவை. கருணாநிதி இருந்தபோதே கட்சியை தன் கையில் எடுத்தார் ஸ்டாலின். இதை எதிர்த்தார் அழகிரி. ஆனால், எதுவும் பலிக்கவில்லை. கருணாநிதி மறைவுக்குப் பின் கழக தலைவராக ப்ரமோஷன் எடுத்துக் கொண்டு தி.மு.க. என்பதை  ஸ்டாலின் முன்னேற்ற கழகமாக மாற்றிவிட்டார் தளபதி என்கிறார்கள்.Stalin

கருணாநிதி இறந்த 30 வது நாள் மு.க.அழகிரி ஒரு மவுன ஊர்வலம் நடத்தி, உள் அரசியல் புரட்சி செய்திட முனைந்தார். ஆனால், பருப்பு வேகவில்லை. இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் தி.மு.க மிக மோசமாக தோற்கும் என எதிர்பார்த்தார் அழகிரி. அதன் பின் தன் கச்சேரியை வைக்கலாம். ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை தன் பக்கம் இழுத்துக் கட்சியை உடைக்கலாம் என நினைத்தார். ஆனால், ஸ்டாலின் பெற்ற அமோக வெற்றியால் அழகிரியின் நினைப்பில் மண் விழுந்தது.

ஆக இப்படி தொடர் அடியால் விளைவாக பொங்கிய அழகிரியை, அவரது மனைவி காந்தி தேற்றி ‘வீணாகி பிரஷராகி உடம்பைக் கெடுக்காதீங்க. உங்களுக்கான முக்கியத்துவம் வர்றப்ப வரும். அது வரைக்கும் அமைதியா இருங்க.’ என்றாராம். விளைவு, அரசியல் போட்டி, பொறாமை, அதிரடி எல்லாவற்றையும் விட்டுட்டு, அம்மா பக்கம் சாய்ந்துவிட்டார் அழகிரி.Stalin

ஆம் தனது அம்மா தயாளு அம்மாவை அடிக்கடி சந்தித்து, அன்போடு பாசம்காட்டும் மகனாகவே முழுமையாக தன்னை மாற்றிக் கொண்டுவிட்டார். மதுரையில் இருந்து விமானத்தில் வந்தால் மீடியாக்களின் தொல்லை. எனவே சைலண்டாக காரில் காற்றாட வந்து, ஆங்காங்கே வண்டியை நிறுத்தி காஃபி குடித்து, காரில் தனக்கு பிடித்த டி.எம்.எஸ். பாடல்களை இசைக்க விட்டு என்று நிம்மதியான வாழ்க்கைப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறார். அழகிரிக்கு எப்பவுமே அம்மா பாசம் அதிகம். அதிலும் இப்போது தயாளு மீது ஏக நெகிழ்ச்சி, பாசத்தைக் கொட்டுகிறாராம்.Azhagiri

மு.க.அழகிரியின் இந்த மனமாற்றம் ஸ்டாலினின் காதுகளுக்குப் போக, ‘அப்பாடா அண்ணன் எனும் போட்டி அரசியல் தொல்லை விட்டுச்சு’ என்று மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆனால், அழகிரியின் அடிப்பொடிகள்தான் “உங்க லெவலுக்கெல்லாம் அரசியலை விடலாமாண்ணே… ரஜினி கட்சி ஆரம்பிச்சதும் உங்களை கூப்பிடுவார். அவர் கட்சியின் தென் மண்டலத்துக்கு நீங்கதான் பொறுப்பு” என்று உசுப்பேற்றிக் கொண்டே இருக்கிறார்களாம்.