தென் கொரியாவின் முதல் பெண் செய்தி தொகுப்பாளராக அசத்தும் பெண்மணி!

 

தென் கொரியாவின் முதல் பெண் செய்தி தொகுப்பாளராக அசத்தும் பெண்மணி!

தென் கொரியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளராக லீ சோ ஜியாங் என்ற பெண்மணி பணியாற்றி வருகிறார்.

சியோல்: தென் கொரியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளராக லீ சோ ஜியாங் என்ற பெண்மணி பணியாற்றி வருகிறார்.

தென் கொரியாவில் செய்தி சேனல்களை பார்த்தால் பொதுவாக முதிர்ச்சி அடைந்த ஆண்கள் தான் சீரியசான முகத்துடன் செய்தி வாசித்துக் கொண்டிருப்பார்கள். இதுதான் கடந்த கால வரலாறு. ஆனால் அதை முதன் முறையாக லீ சோ ஜியாங் என்ற பெண்மணி உடைத்தெறிந்துள்ளார்.

ttn

இவருக்கு 43 வயது ஆகிறது. தென் கொரியாவின் தேசிய பொது ஒளிபரப்பாளர் கே.பி.எஸ்இல் தான் இந்த சாதனையை லீ சோ ஜியாங் செய்துள்ளார்.

ttn

நியூஸ் 9 என்ற நிகழ்ச்சியில் அவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் அவர் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து 9.6 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் இவரது செய்திகளை மக்கள் ஆர்வத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.