தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் வீடுகள் அதிர்ந்தன. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் வீடுகள் அதிர்ந்தன. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

தென் அமெரிக்காவில் உள்ள மேற்குக் கடற்கரை பகுதியில் இருக்கும் சிலி நாட்டின் சென்டியாகோவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கின. மேலும் சாலைகள் பிளவுக்கு உள்ளானது. இதனால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பித்துள்ளது. 

earthquake

இந்த நிலநடுக்கத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என சிலி நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. மேலும் முதலில் இந்த நில அதிர்வு 7.8 கணக்கிடப்பட்டது. பின்னர் சிலி நிலஅதிர்வு ஆய்வு மையம் 6.8 என உறுதி செய்தது.

சிலி நாட்டில் இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது குறைந்த அளவிலான உயிர்ச்சேதம் மட்டுமே ஏற்பட்டிருந்தது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இதற்க்கு காரணமாக இருந்தது. ஆனால் இம்முறை எந்தவித முன்னறிவிப்பும் மக்களுக்கு அளிக்கப் படவில்லை. இருப்பினும் முன்னமே செய்து வைத்த ஏற்பாடு காரணமாக உயிர் சேதம் முற்றிலும் தடுக்கப் பட்டிருக்கிறது.

90 சதவீதம் நில அதிர்விற்கு உள்ளாகக்கூடிய பகுதியில் சிலி நாடு அமைந்திருப்பதால், அவ்வப்போது இதுபோன்ற நிலஅதிர்வுகள் ஏற்படும் என சிலி நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. 

சிலி நாட்டில் ஏற்பட்ட 3வது அதிகபட்ச ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆகும்.

-vicky