தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கமா வருது, ஆனா ரொம்ப கம்மியா

 

தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கமா வருது, ஆனா ரொம்ப கம்மியா

ஜூன் முதல் தேதி முதல் கேரளாவில் வழக்கமாக துவங்கும் தென்மேற்கு பருவ மழை இந்த வருடம், சற்றே தள்ளிப்போய் மூன்று நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூன் நான்காம் தேதிவாக்கில்தான் பெய்ய துவங்கும் என வானிலை முன்னறிவுப்பு வெளியாகி உள்ளது. என்ட்ரிதான் லேட் என்றால், வீச்சும் குறைவாகவே இருக்குமாம்.

ஜூன் முதல் தேதி முதல் கேரளாவில் வழக்கமாக துவங்கும் தென்மேற்கு பருவ மழை இந்த வருடம், சற்றே தள்ளிப்போய் மூன்று நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூன் நான்காம் தேதிவாக்கில்தான் பெய்ய துவங்கும் என வானிலை முன்னறிவுப்பு வெளியாகி உள்ளது. என்ட்ரிதான் லேட் என்றால், வீச்சும் குறைவாகவே இருக்குமாம். கேரளாவில் தன் வருகையை பதிவுசெய்யும் தென்மேற்கு பருவம், அப்படியே வேகமெடுத்து கர்நாடகா பக்கம் செல்லும். கர்நாடகாவில் மழை (தேன்) கொட்டினால், தமிழக காவிரி இனிக்கும். ஒருவேளை மழை குறைந்து கர்நாடகாவில் தேள் கொட்டினால் தமிழக மேட்டூரில் நெறி கட்டிக்கொள்ளும்.

karnataka

சென்ற வருடம் கர்நாடகாவில் காட்டு காட்டென காட்டிய பருவமழையால், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகமாகி, இரண்டு மூன்று முறை அணை நிரம்பிய அதிசயம் எல்லாம் நிகழ்ந்தது. விளைவாக, காவிரியிலும் லட்சக்கணக்கான கன அடி நீர் திறக்கப்பட்டு, திருச்சி முக்கொம்பு பாலம் உடைந்ததும், “பாலம்னா உடையத்தான் செய்யும், வெள்ளத்துல உடையாத பாலம் எங்க இருக்கு” என எடப்பாடியார் எதிர்கேள்வி கேட்டு வாயடைத்ததும் நிகழ்ந்தது.

veeranam lake

இந்த முறை அதற்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜா, வாய்ப்பே இல்ல என்பதுதான் வானிலை ஆய்வாளர்களின் கருத்து. ஏற்கெனவே மேட்டூர் அணை 50 அடிக்கு வந்துவிட்டது. வெள்ளம் வரும்போதே கர்நாடகா மூக்கால் அழுதுகொண்டுதான் தண்ணீர் திறக்கும், இப்போ வறட்சி வேறாம், சொல்லவே வேண்டாம் அவர்களுக்கு. சரி, இதெல்லாம் தஞ்சாவூர்க்காரர்கள் பிரச்னை, எனக்கெதற்கு என கேட்கும் சென்னைவாசியா நீங்கள்? மழை வந்தால்தான் மேட்டூர் நிரம்பும். மேட்டூர் நிரம்பினால்தான் காவிரி நனையும். காவிரி நனைந்தால்தான் வீராணம் ரொம்பும். வீராணம் நிரம்பினால்தான் சென்னைக்கு குடிநீர். என்ன, மழைவேண்டி வீட்டில் இருக்கும் அண்டா குண்டாக்களில் அமர்ந்து மந்திரம் சொல்ல தயாரா சென்னைவாசிகளே?