தென்மலை அணை நிரம்பியது… வருகிற நீரை அப்படியே திறந்துவிடும் கேரளா!விவசாயிகள் மகிழ்ச்சி!

 

தென்மலை அணை நிரம்பியது… வருகிற நீரை அப்படியே திறந்துவிடும் கேரளா!விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவ நிலை காரணமாக பரவலாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், கேரளாவையும், கர்நாடகாவையும் கன மழை ஆட்டிப் படைக்கிறது.

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவ நிலை காரணமாக பரவலாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், கேரளாவையும், கர்நாடகாவையும் கன மழை ஆட்டிப் படைக்கிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் கல்லடா ஆற்றின் குறுக்கே இருக்கும் தென்மலை அணை நிரம்பவில்லை. இந்நிலையில், கேரளாவில் தற்போது பரவலாக பெய்து வரும் கன மழையின் காரணமாக, தென்மலை அணை நிரம்பியுள்ளது. தென்மலை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நேற்று மறுகால் விழத் தொடங்கியது. 

dam

தென்மலை அணைக்கு விநாடிக்கு தற்போது 500கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், அணையில் இருந்து விநாடிக்கு 500கனநீர் அப்படியே வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. தென்மலை அணையில் 7.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 2 யூனிட்டுக்கள் உள்ளன. இவற்றிலும் தற்போது மின் உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தென்மலை அணை அமைந்துள்ள இடம், கேரளா மாநிலத்திலேயே சிறந்த பொழுதுபோக்கு நிறைந்த பகுதியாகும். இங்கு படகு போக்குவரத்தும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொய்த்து போன பருவமழையால் நிரம்பாத தென்மலை அணை, தற்போது நிரம்பி வழிவது விவசாயிகளை பெரும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.