தென்னை விவசாயிகளுக்கு ரூ 4 லட்சம் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

 

தென்னை விவசாயிகளுக்கு ரூ 4 லட்சம் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 4 லட்சம் வழங்க வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர்: தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 4 லட்சம் வழங்க வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை தலைகீழாக புரட்டி போட்டிருக்கிறது. தென்னை, வாழை, நெல் உள்ளிட்டவைகள் அழிந்து மக்களின் வாழ்வாதாரம் அனைத்தும் அழிந்திருக்கிறது. ஏறத்தாழ ரூ 10,000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால் தமிழக அரசோ ரூ 1000 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் ரூ 15,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. மத்திய குழுவும் புயல் பாதித்த மாவட்டங்களில் இன்று முதல் ஆய்வை தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மந்த நிலையில் நடக்கின்றன. தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.