தென்னிந்திய நடிகர்களில் மகேஷ் பாபுவுக்கு தான் இதில் முதலிடம்!

 

தென்னிந்திய நடிகர்களில் மகேஷ் பாபுவுக்கு தான் இதில் முதலிடம்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப்  பெற்றவர். சமூக வலைத்தளங்களிலும் கூட மிகப்பெரிய ஃபேன் பாலோவிங் பெற்ற நடிகரும் கூட. அதை மறுபடியும் நிரூபிக்கும் வகையில் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர்களில் ட்விட்டரில் அதிக பாலோவ்ர்ஸ் கொண்ட நடிகர் இப்போ மகேஷ் பாபு தான்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப்  பெற்றவர். சமூக வலைத்தளங்களிலும் கூட மிகப்பெரிய ஃபேன் பாலோவிங் பெற்ற நடிகரும் கூட. அதை மறுபடியும் நிரூபிக்கும் வகையில் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர்களில் ட்விட்டரில் அதிக பாலோவ்ர்ஸ் கொண்ட நடிகர் இப்போ மகேஷ் பாபு தான். ட்விட்டரில் 90 லட்சம் பாலோவ்ர்களைப் பெற்றுள்ளார் அவர். இதன் மூலம் ட்விட்டரில் அதிக பாலோவ்ர்ஸ் கொண்ட நட்சத்திரமாக அவர் கருதப்படுகிறார். இதற்காக தனது பாலோவ்ர்ஸ்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இவர் நடித்த ஒக்கடு, போக்கிரி படங்கள் தமிழில் கில்லி, போக்கிரி என ரீமேக் ஆகி பெரும் வெற்றி பெற்றன. தனது ட்விட்டர் பக்கத்தில் மற்ற நடிகர்களின் படங்களை ப்ரோமொட் செய்வது, ரசிகர்களுடன் தொடர்ந்து பேசுவது, தனது கருத்துக்களைப் பதிவு செய்வது வருவதன் மூலம் தான் அவர் இவ்வளவு அதிக பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார். 

mahesg-babu-90

மற்ற தெலுங்கை ஸ்டார்களான பவன் கல்யாண் (3.4 மில்லியன்) அல்லு அர்ஜுன் (3.8 மில்லியன்), ஜூனியர் என்.டி.ஆர் (3.5 மில்லியன்), ராஜமௌலி (4.7 மில்லியன்) மற்றும் ராம் கோபால் வர்மா (3.9 மில்லியன்) ஆகியோர் மகேஷுக்குப் பிறகு ட்விட்டரில் அதிக பாலோவ்ர்ஸ்களைப்  பெற்றுள்ளனர். நடிகைகளில் சமந்தா (7.8 மில்லியன்) மற்றும் த்ரிஷா (5+ மில்லியன்) பாலோவ்ர்ஸ்களைப்  பெற்றுள்ளனர்.

twitter-id

அப்படியே பாலிவுட்டுக்குபோனால், அமிதாப் பச்சன், சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் போன்றவர்கள் ட்விட்டரில் கிட்டத்தட்ட 40+ மில்லியன் பாலோவ்ர்ஸ்களை வைத்திருக்கிறார்கள். பாலிவுட்க்கு மார்க்கெட் கொஞ்சம் பெருசு பாஸ்…!