தென்னாப்பிரிக்க அணியிலிருந்து ஸ்டெய்ன் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி

 

தென்னாப்பிரிக்க அணியிலிருந்து ஸ்டெய்ன் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விலகினார். 

இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விலகினார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் பிரபல பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின், உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். ஐபிஎல் தொடரின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் அவர் இத்தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்றாக அந்த அணியில், பியூரன் ஹென்டிரிக்ஸ்  சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நாளை தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், அந்த அணியின் முக்கிய வீரர் தொடரில் இருந்து விலகி உள்ளார்.