தென்னாப்பிரிக்கா பேட்டிங்… மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க

 

 தென்னாப்பிரிக்கா பேட்டிங்… மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க

ஊரே இந்தியா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ம் மேட்ச் பார்க்க ஆர்வத்தோட டி.வி.முன்னால உட்கார்ந்திருந்தா, இந்த தென்னாப்பிரிக்கா முதல்ல பேட்டிங் எடுத்து இம்சை பண்ணுது என்று கடுப்புடன் மேட்ச் பார்க்க உட்கார்ந்திருப்பவர்களே…

தென்னாப்பிரிக்கா பேட்டிங்… மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.. 
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்னு வடிவேலு ஸ்லாங்ல நம்ம மனசை இப்போ ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டா தான் இந்தியா விளையாடறப்ப உற்சாகப்படுத்த  முடியும். 
உங்களோட மனசை ரிலாக்ஸ் பண்றதுக்காக கிரிக்கெட் போட்டியை வெச்சு சில சந்தேகங்களைக் கேட்கறேன்.. நல்லா விளையாட தெரிஞ்சவங்க யார்கிட்டேயாவது இதுக்கான பதிலைக் கேட்டுச் சொல்லுங்க…

1. கால்பந்து விளையாட்டில் கோல் கீப்பர் கோலுக்கு முன்னாடி இருப்பார். ஆனா கிரிக்கெட்டில் ஏன் விக்கட் கீப்பர் விக்கட்டுக்கு முன்னாடி நின்று பாதுகாக்காமல் விக்கட்டுக்கு பின்னாடி நிற்கிறார்?

2. ஒரு ஓவருக்கு 6 பந்துன்னு சொல்றாங்க. ஆனா மேட்ச் பார்க்க நம்மக்கிட்ட டிக்கெட்டுக்கு காசு எல்லாம் வாங்கிட்டு ஒரே பந்தை மட்டுமே பயன்படுத்துறாங்க. இது ஏமாற்று வேலைதானே!  1 ஓவருக்கு ஆறு பந்துன்னா மொத்தம் 50 ஓவருக்கு 300 பந்துகள் தானே வாங்கியிருக்கணும். 

3. காலில் பந்து பட்டால் லெக் அம்பயர் தானே அவுட் கொடுக்கணும். அப்புறமா ஏன் நேரே நின்னுக்கிட்டு இருக்கிற அம்பயர்  அவுட் கொடுக்குறாரு?

4. கிரிக்கெட்டில் ஒரு நுட்பமான  ஒரு வீரர் யார் தெரியுமா? Point ல் நிற்கும் வீரர் தான்.  அதே சமயத்தில் புத்திகெட்ட வீரர்னு  Silly Point ல் நின்னுக்கிட்டு இருக்கிறவரைச் சொல்லலாமா?

5. பந்தை ஓங்கி அடித்து, அது தரையில் ஓடி, அதை துரத்திப் பிடிக்க எதிரணி வீரரை ஓடவிட்டு மைதானத்தைக் கடந்த பந்துக்கு 4 ரன்கள். அதே சமயத்தில் ஒரு சிரமமும் இல்லாமல், ஒரு வீரருக்கும் வேலை கொடுக்காமல் ஆகாயம் வழி கடந்த பந்துக்கு 6 ரன்கள். இது என்னங்க நியாயம். உழைத்தவனுக்குத்தானே ஊதியம் அதிகம் கொடுக்கணும்.?

6. நான் பார்த்த வரையில் Cover மற்றும் Extra Cover வீரர்கள் தங்களை மறைத்துக் கொள்ள எந்த கவரையும் உபயோகித்தது கிடையாது. அப்புறமா ஏன் Cover, Extra Coverன்னு சொல்லுறோம்?

7. கிரிக்கெட் சூதாட்டம்னு நமக்கு எப்ப தெரியும்ன்னா, நடுவர் ஆட்காட்டி விரலால் தலையை சுற்றி Free hit என்று சொன்னபோதுதான். அப்ப மற்ற அடிகளுக்கெல்லாம் காசு வாங்கிட்டாங்கன்னு தானே அர்த்தம்.?

8. ஏனுங்க இந்த Long leg ல் நிற்பவர் கால் நீளமாகவும், Short leg ல் நிற்பவர் கால் குட்டையாகவுமச் இருக்கு? யாரை ஏமாத்தப்பர்க்கிறீங்க?

9. நடுவர் ஒரு கையை உயர்த்திக்காட்டினால் அவுட். ஆனால் இரண்டு கையையும் உயர்த்திக்காட்டினால் 2 பேரும் அவுட்டாக தானே இருக்கணும்? அதை மட்டும் சிக்ஸ்ன்னு ஏன்ப்பா கதை விடுறீங்க.

10. பந்து வீசுபவர் கோட்டைத் தாண்டி காலை வைத்து வீசினால் அது No ball. தவறு செஞ்சது பந்து வீசுபவரின் கால், பந்தை வீசியது அவரது கை. அதற்கு தண்டனையாக இருக்கும் பந்தை இல்லாத பந்துன்னு எப்படிங்க சொல்வீங்க? இது அநியாயம். இல்லையா?

11. ஏனுங்க Square leg Umpire என்று சொல்றாங்க. அவர் கால்கள் சாதாரணமாகத்தானே இருக்கு. சதுரமாகவா இருக்கு?

12. இந்த விக்கெட்டைத்திருடரதுக்கு பந்து வீசுபவருடன் துணை நிற்பவர் விக்கெட்கீப்பர்தான். அவர்தானே Hand and glove ஆக இருக்கார்.
இவ்வளவு படிச்சும் உங்களுக்கு டென்ஷன் குறையலைன்னா இதை, மேட்ச் பார்க்காம எந்நேரமும் மொபைலையே நோண்டிக்கிட்டு இருக்கிற உங்கள் நண்பர்களுக்கு பார்வார்ட் பண்ணுங்க…