தென்னாப்பிரிக்காவை இந்தியா வெல்லுமா? என்ன சொல்கிறார் கேப்டன் விராட் கோலி?

 

தென்னாப்பிரிக்காவை இந்தியா வெல்லுமா? என்ன சொல்கிறார் கேப்டன் விராட் கோலி?

தென்னாப்பிரிக்காவை இந்தியா வெல்லுமா? என்ன சொல்கிறார் கேப்டன் விராட் கோலி?
மே 30-ஆம் தேதி துவங்கிய உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில், ஏறக்குறைய எல்லா நாட்டு கிரிக்கெட் அணிகளுமே விளையாட ஆரம்பித்து விட்டது

தென்னாப்பிரிக்காவை இந்தியா வெல்லுமா? என்ன சொல்கிறார் கேப்டன் விராட் கோலி?
மே 30-ஆம் தேதி துவங்கிய உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில், ஏறக்குறைய எல்லா நாட்டு கிரிக்கெட் அணிகளுமே விளையாட ஆரம்பித்து விட்டது. இந்திய அணி மட்டும் தான் இன்னும் ஒரு போட்டியிலும் விளையாடாமல் இன்று களம் காணுகிறது.

தென்னாப்பிரிக்காவை இந்தியா வெல்லுமா?

வங்கதேசம், தென்னாப்பிரிக்கா போட்டியில், தென்னாப்பிரிக்கா எளிதில் வங்கதேசத்தை வீழ்த்தி விடும் என்றே பலரும் எதிர்பார்த்து, கணித்திருந்தார்கள். பலம் குறைந்த வங்கதேச அணியிடம் பலமான குத்து வாங்கி அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தது தென்னாப்பிரிக்கா. அந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கும், அதள பாதாளத்திற்கு சென்றுள்ள அவர்களது ரன் ரேட் விகிதத்தை உயர்த்துவதற்கும் நிச்சயம் இன்று போராடுவார்கள்.
போட்டி நடைபெறும் இங்கிலாந்து மைதானத்தில் தற்போது நல்ல வெப்ப நிலை உள்ளது. இன்றைய போட்டி, அதிக ரன்கள் குவிக்கும் போட்டியாக இருக்கும். 
இன்றைய போட்டி பற்றி விராட் கோலி என்ன சொல்கிறார்…

தென்னாப்பிரிக்காவை இந்தியா வெல்லுமா?

“இந்திய அணி தற்போது சமநிலையில் உள்ளது. வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடும் நிலையில் உள்ளனர்.  இந்த உலகக்கோப்பை சவால் மிக்கதாக இருக்கும். எந்த அணியும் எந்த அணியை வெல்லலாம் . குல்தீப், சாஹல் இருவரும் முக்கிய பந்து வீச்சாளர்கள். கவனமாக சமநிலையோடு ஆடும் அணியே கடைசிவரை செல்லும். உலக்கோப்பையில் நாம் அழுத்தத்தை எந்தளவிற்கு கையாளுகிறோம் என்பதிலேயே வெற்றி இருக்கிறது. எனவே  கவனமான நல்ல விளையாட்டை வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். 
இத்தனை நாட்களாக பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற வெற்றி பெறும் என்று நம்பிய அணிகள் எல்லாம் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்ததை இந்திய வீரர்கள் கவனித்து, அவர்களின் தோல்விகளில் இருந்து பாடம் கற்று இருப்பார்கள். உலகக் கோப்பையில் விளையாடா விட்டாலும், சச்சின் இந்த உலகக் கோப்பை போட்டியில் வர்ணனையாளராக இருக்கிறார். அவரது அனுபவங்களும், ஆலோசனைகளும் நம் அணிக்கு பெரிய பலமாக இருக்கும்.

இந்திய அணி தற்போது சமநிலையில் உள்ளது

கோப்பையுடன் நாடு திரும்பும் உத்வேகத்தில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. இந்த உலகக் கோப்பை தான் அநேகமாக டோனிக்கு கடைசி உலகக் கோப்பைப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். டோனி அவ்வாறு முடிவு செய்திருக்கும் பட்சத்தில் முழு உத்வேகத்துடன் இன்னொரு முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவார். 
எது எப்படியிருந்தாலும், ஒரு பக்கம் வென்றே ஆக வேண்டிய முயற்சியில் தென்னாப்பிரிக்காவும், வெற்றியுடன் தன் கணக்கைத் துவங்கும் முனைப்புடன் இந்தியாவும் இன்று நேருக்கு நேர் சந்திப்பதால், இன்றையப் போட்டியில் விறுவிறுப்புக்கும் கொஞ்சமும் பஞ்சமிருக்காது. இன்றைய போட்டியில் ரன் ரேட் விகிதம் ஒரு பெரிய இன்னிங்ஸ் மைல் கல்லாக இருக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணிக்கிறார்கள்.