தென்னக சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திரன் பாபு காலமானார் !

 

தென்னக சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திரன் பாபு காலமானார் !

‘சாவித்திரி பாடும் வானம்பாடி’, ‘பகல் நிலவு’ ‘மந்திரப்புன்னகை’, ‘காதல் என்னும் நதியினிலே’ ‘புதிய ஸ்வரங்கள்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

1947 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி மதுராந்தகத்தில் பிறந்த ராமச்சந்திரன் பாபு,  இவரது குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் குடியேறினார். புனே பிலிம் இன்ஸ்டியூட்டில் ஒளிப்பதிவு கற்றுக் கொண்டார். 1971-ஆம் ஆண்டு பிரபல மலையாள இயக்குநரான ஜான் ஆப்ரஹாம் இயக்கிய படத்திற்கு முதன்முதலில் ஒளிப்பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து,  தெலுங்கு, தமிழ், ஹிந்தி, அரபி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் கிட்டத்தட்ட 135 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ttn

தமிழில் மிகவும் புகழ்பெற்ற , ‘அக்ரஹாரத்தில் கழுதை’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘ஒரே வானம் ஒரே பூமி’, ‘தேவதை’, ‘சாவித்திரி பாடும் வானம்பாடி’, ‘பகல் நிலவு’ ‘மந்திரப்புன்னகை’, ‘காதல் என்னும் நதியினிலே’ ‘புதிய ஸ்வரங்கள்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் முன்முதலாக் இயக்கிய ‘உணரு’ மற்றும் ‘பகல்நிலவு’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இவரே.  

tn

இவர் 4 படங்களுக்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை 4 முறை கேரளா அரசிடம் பெற்றிருக்கிறார். 2003 ஆம் ஆண்டு வெளியான ராஜீவ் அஞ்சலியின்’beyond the soul’ மற்றும் ‘pirates blood’ என்ற ஆங்கில படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ttn

தென்னக சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளராகப் போற்றப்பட்டு வந்த ராமசந்திரன் பாபு,  நேற்று  திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.