தென்தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை பெய்யும் !

 

தென்தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை பெய்யும் !

வடகிழக்கு பருவமழை வலுவாக உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் அதாவது 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் 17 மாவட்டங்களில் கனமழையும் 3 மாவட்டங்களில் மிகக் கனமழையும் பெய்யும்

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

puviyarasan

அதில், தென்தமிழக கடற்கரை பகுதிகளிலும் தென்மேற்கு அரபிக்கடலில் பகுதியிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, வடகிழக்கு பருவமழையும் வலுவாக உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் அதாவது 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் 17 மாவட்டங்களில் கனமழையும் 3 மாவட்டங்களில் மிகக் கனமழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளார். 

rain

அதனைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும்  வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் காவிரி டெல்டா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது தெரிவித்தார். கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளுக்குத் தமிழக மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

rain

மேலும், இன்றைய வானிலையைப் பொறுத்த வரை, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும்  சென்னையில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.