தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இரண்டு நாட்களுக்கு முழுக்கடையடைப்பு!

 

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இரண்டு நாட்களுக்கு முழுக்கடையடைப்பு!

ஆலங்குளம் தாலுகாவில் இரண்டு நாட்களுக்கு முழுமையாக கடைகள் அடைக்கப்படுவதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்காசியில் அதிகமாக கொரோனா பரவி வருவதால் ஆலங்குளம் தாலுகாவில் இரண்டு நாட்களுக்கு முழுமையாக கடைகள் அடைக்கப்படுவதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் ஏராளமான மக்கள் வெளிநாடுகளில் வசித்து வந்தவர்கள். அதனால் அவர்கள் மூலமாக கொரோனா பரவாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் அவர்களை கண்டறிந்து தனிமைபடுத்தி வருகிறது. அதே போல கொரோனா பாதிப்பில் அதிகாமாக இருக்கும் மாவட்டமான சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் வசித்து ஆலங்குளம் திரும்பிய நபர்கள் என 102 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் இன்றும் நாளையும் முழுமையாக கடைகள் அடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.