தென்காசி மாவட்டத்தின் முதல் குறைதீர் கூட்டம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

 

தென்காசி மாவட்டத்தின் முதல் குறைதீர் கூட்டம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

நெல்லை மாவட்டத்தில் இருந்து தனக்கென எல்லைகளை வரையறுத்துக் கொண்டு, தமிழகத்தின் 33 ஆவது மாவட்டமாகத் தென்காசி மாவட்டம் நேற்று உதயமானது.

நெல்லை மாவட்டத்தில் இருந்து தனக்கென எல்லைகளை வரையறுத்துக் கொண்டு, தமிழகத்தின் 33 ஆவது மாவட்டமாகத் தென்காசி மாவட்டம் நேற்று உதயமானது. இதனை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறந்து வைத்தார்.

thenkaasi

அந்நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தென்காசி மக்களின் 33 ஆண்டுக்கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அம்மாவட்டத்தின் ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டிருந்தார்.   

thenlaasi

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமை தோறும் குறைதீர் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

thenkaasi

அதன் படி, புதியதாக உருவாகியுள்ள தென்காசி மாவட்டத்தின் முதல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வரும்  25 ஆம் தேதி திங்கள் காலை 11 மணிக்கு மேம்பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார். மேலும், குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனு மூலம் தெரிவித்துப் பயன்பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்