தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி – ரிஷப் பண்ட் அதிரடி நீக்கம்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி – ரிஷப் பண்ட் அதிரடி நீக்கம்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக விருத்திமான் சாஹாவிற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் கட்டமாக நடைபெற்ற 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில், ஒரு போட்டி மழை காரணமாக ரத்து ஆனது. அடுத்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் டி20 தொடர் சமனானது.

india vs sa

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நாளை முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியை இன்று மதியம் பிசிசிஐ அறிவித்தது. அதில் காயம் காரணமாக நீண்ட காலம் ஓய்வில் இருந்த விருத்திமான் சஹா மீண்டும் அணியில் இடம் பெற்ற போதும் ரிஷப் பண்ட் ஒரு போட்டிகளில் நன்றாக ஆடி வந்ததால், தொடர்ந்து வெளியில் அமர்த்தப்பட்டிருந்தார். 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் சொதப்பினார். மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் தொடர்ந்து சொதப்பியதால், தற்போது முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து பண்ட் நீக்கப்பட்டு மீண்டும் விருத்திமான் சஹா உள்ளே எடுத்து வரப்பட்டுள்ளார். 

சென்ற டெஸ்ட் தொடரில் வெளியில் அமர்த்தப்பட்டு இருந்த ரவிச்சந்திரன் அஷ்வின் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அணியில் கொண்டு வரப்பட்டுள்ளார். 

rishabh pant

காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறிய பும்ராவிற்கு பதிலாக உள்ளே வந்த உமேஷ் யாதவ் இப்போட்டியில் விளையாடவில்லை. வேகப்பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது சமி இருவர் மட்டுமே ஆடுகின்றனர்.  சுழல் பந்துவீச்சில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் உள்ளனர். மற்ற வீரர்களில் எவ்வித மாற்றமும் இல்லை. 

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் 

விராட் கோலி (கேப்டன்), அஜிங்கிய ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், சித்தேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, விருத்திமான் சஹா (கீப்பர்), இசாந்த் சர்மா, முகமது சமி.

-vicky