தென்ஆப்பிரிக்காவில் சிங்கங்களால் வேட்டையாடப்பட்ட 21 வயது பெண் பலி

 

தென்ஆப்பிரிக்காவில் சிங்கங்களால் வேட்டையாடப்பட்ட 21 வயது பெண் பலி

தென் ஆப்பிரிக்காவில் மிருகக்காட்சி காப்பாளரான 21 வயது பெண் ஒருவர் சிங்கங்களால் வேட்டையாடப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவில் மிருகக்காட்சி காப்பாளரான 21 வயது பெண் ஒருவர் சிங்கங்களால் வேட்டையாடப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்ஆப்பிரிக்காவில் மிருகங்கள் சுதந்திரமாக சுற்றித் திரியக் கூடிய பகுதிகள் நிறைய உள்ளன. இத்தகைய இடங்கள் கேம் ரிசர்வ் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இடங்களில் மிருகங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதுபோன்ற ஒரு கேம் ரிசர்வ் இடத்தில் மிருகக்காட்சி காப்பாளரான 21 வயது பெண் ஒருவர் சிங்கங்களால் வேட்டையாடப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

ttn

அவரது புகைப்படங்களை முதன்முறையாக அதிகாரிகள் வெளியிட்டிருக்கிறார்கள். சிங்கங்கள் தங்கும் கூண்டுக்கு அருகில் குதறப்பட்ட நிலையில் அந்தப் பெண் சடலமாக கிடந்துள்ளார்.

ttn

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எப்போதும்போல அந்தப் பெண் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தபோது தான் சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், எத்தனை சிங்கங்கள் அவரை தாக்கின என்பது குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டு உள்ளது.