தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக எனக்கு சம்மன் ஏதும் வரவில்லை : ரஜினிகாந்த் பேட்டி !

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக எனக்கு சம்மன் ஏதும் வரவில்லை : ரஜினிகாந்த் பேட்டி !

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு போராட்டம் இன்னும் வலுப்பெற்றதால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துள்ளனர்’ என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ttn

இந்த வழக்கை விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்  குறித்து விளக்கம் அளிக்க வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி ரஜினிகாந்த்துக்குச் சம்மன் அனுப்பியதாக நேற்று தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக எனக்கு எந்த சம்மனும் இதுவரை வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.