தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் : மத்திய அரசு தகவல்

தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் : மத்திய அரசு தகவல்

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவில் பணிபுரியும் விஞ்ஞானிகளின் விடா முயற்சியால் ராக்கெட் ஏவும் தொழில் நுட்பத்தில் இந்தியா சர்வதேச அளவில் முன்னோடியாகத் திகழ்கிறது.

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவில் பணிபுரியும் விஞ்ஞானிகளின் விடா முயற்சியால் ராக்கெட் ஏவும் தொழில் நுட்பத்தில் இந்தியா சர்வதேச அளவில் முன்னோடியாகத் திகழ்கிறது.

rakket

இஸ்ரோவின் வளர்ச்சி வேகமாக இருப்பதால், ஏற்கனவே ஸ்ரீஹரி கோட்டாவில் இருக்கும் 2 ராக்கெட் ஏவுதளத்தோடு சேர்த்து மூன்றாவது ஏவுதளம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதன் படி, அதிகாரிகளின் பல்வேறு கட்ட சோதனைக்குப் பிறகு தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. 

raket

குலசேகரன்பட்டினம் பகுதியில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பினார். அதற்கு இந்திய விண்வெளித்துறை சார்பில் பதிலளித்த ஜித்தேந்திர சிங், ஆந்திரா ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் இருக்கும்  நிலையில் அடுத்ததாகத் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.