தூத்துக்குடியில் தான் அதிக காற்று மாசு – அமைச்சர் கே.சி. கருப்பணன் தகவல்

தூத்துக்குடியில் தான் அதிக காற்று மாசு – அமைச்சர் கே.சி. கருப்பணன் தகவல்

நாளை (ஜூன்5) உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் காற்று மாசு தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

நாளை (ஜூன்5) உலக சுற்றுச்சூழல் தினம்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.கருப்பணன், 24 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 36 இடங்களில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசு அளவினைக் கண்டறியும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் நிலக்கரி இறக்குமதி காரணமாக தூத்துக்குடியில் தான் காற்று மாசு அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

காற்று மாசு

சுற்றுசூழலைப் பாதுகாக்க நிறைய திட்டங்களை வகுத்துள்ளதாகவும், வனவிலங்குகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க வனப்பகுதிகளுக்குள்  34 ஆயிரம் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் எந்தெந்த மரங்களை வளர்க்கலாம் என்று கையேடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.