தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவதற்கு இது தான் காரணம்!? தமிழிசை தகவல்!

 

தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவதற்கு இது தான் காரணம்!? தமிழிசை தகவல்!

தூத்துக்குடியில் நாடார்  வாக்கு வங்கியைக் குறிவைத்து கனிமொழி போட்டியிடுகிறார் என்று தமிழிசை கூறியுள்ளார். 

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நாடார்  வாக்கு வங்கியைக் குறிவைத்து கனிமொழி போட்டியிடுகிறார் என்று தமிழிசை கூறியுள்ளார். 

பாஜக மருத்துவர் அணியில் இணைந்து கட்சி பணியை தொடங்கிய  தமிழிசை சவுந்தரராஜன் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளார். தமிழிசையைப் பொறுத்தவரையில் அவர்  ஒருவர் பாஜக தலைவரிகளில் நன்கு பரிட்சியமானவர். தன்னை பற்றிய மீம்ஸ்களுக்கும், விமர்சனங்களுக்கும் அஞ்சாமல், ஒரு பெண்ணாக எல்லாவற்றையும் சமாளித்து களம் காண இருப்பவர். 

tamilisai

ஒருபக்கம் அதிமுக கூட்டணி, மாவட்டத்தை சேர்ந்தவர் போன்ற பலமான காரணிகள் முன் இருந்தாலும், மற்றொரு பக்கம், வலிமையான எதிர் வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கஜா புயல், பாஜக மீதான அதிருப்தி போன்றவை அவரது தலைக்கு மேல் கத்தி போல் தொங்கி கொண்டிருக்கிறது. 

bjp

இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றிக்கு பேசியளித்துள்ள தமிழிசையிடம், நாடார் சமூகத்தை டாக்கெட் செய்து தான் தூத்துக்குடியில் களம்  காணுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், ‘நிச்சயமாகக் கிடையாது. ஒருவேளை கனிமொழி அப்படி நினைத்திருக்கலாம். நான் என்னை பெரிதாக நம்புகிறேன். அரசியலுக்காக என் மருத்துவ பணியை விட்டுவிட்டு வந்தவள். என் அம்மா பிறந்த ஊர் என்பதால், அங்கு தான் நான் என் பள்ளி படிப்பைப் பயின்றேன் என்ற முறையில் தென் மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது தற்போது நிறைவேறி உள்ளது’ என்றார். 

kanimozhi ttn

ஆனால்  இவருக்கு எதிராக களமிறங்கியுள்ள கனிமொழியோ, தூத்துக்குடியில் கிராமசபைக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று களப்பணியாற்றி வந்தவர். அதனால் ஆளுங்கட்சி சார்பில் தமிழிசையும், எதிர்க்கட்சி சார்பில் கனிமொழி என இரண்டு பெண்களும் நேரடியாக அரசியல் களத்தில் மோத இருப்பது  தமிழக அரசியலில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்பதில் துளிகூட சந்தேகமில்லை.