தூத்துக்குடிக்கு கூடுதலாக ரூ.50 லட்சம் வழங்கிய கனிமொழி!

 

தூத்துக்குடிக்கு கூடுதலாக ரூ.50 லட்சம் வழங்கிய கனிமொழி!

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளுக்கு கட்டமைப்பை உருவாக்க, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள நிதி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி ரூ.1 கோடி அளித்திருந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஏற்கனவே ரூ.1 கோடி அளித்திருந்த நிலையில் கூடுதலாக ரூ.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளார் கனிமொழி.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளுக்கு கட்டமைப்பை உருவாக்க, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள நிதி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி ரூ.1 கோடி அளித்திருந்தார். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையை பார்வையிட்ட அவர் கூடுதலாக ரூ.50 லட்சத்தை ஒதுக்கி அதை கலெக்டரிடம் வழங்கினார்.

kanimozhi-788

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டேன்.கொரோனா சிறப்புப் பிரிவில் எத்தனை படுக்கைகள் உள்ளன, என்னென்ன தேவை உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தேன்.மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் (PPE kits), சானிடைசர்களையும் வழங்கினேன்.
பின்னர்,மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தபோது, கொரோனா சிறப்பு பிரிவு மின்தூக்கிக்காக (lift) நிதி தேவை என்று கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி அளித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்” என்று கூறியுள்ளார்.