தூதுவளை கீரையை இப்படி சாப்பிடுங்க… உடல் பலப்படும்!

 

தூதுவளை கீரையை இப்படி சாப்பிடுங்க… உடல் பலப்படும்!

தூதுவளைக்கு சிங்க வல்லி, ரத்து நயத்தான், அளர்க்கம், தூதூவேளை, தூதூளம், தூதுளை என்று வளர்கிற இடங்களைப் பொருத்து வேறு வேறு பெயர்கள் உண்டு. பொதுவாக வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வளரும் தன்மையைக் கொண்டது. இதன் இலைகள், வேர், மலர், கனி என முழுத் தாவரமும் பயன் தரும். கரும்பச்சை நிறத்தில், ஊதா நிற பூக்களுடன் இருக்கும். 

தூதுவளைக்கு சிங்க வல்லி, ரத்து நயத்தான், அளர்க்கம், தூதூவேளை, தூதூளம், தூதுளை என்று வளர்கிற இடங்களைப் பொருத்து வேறு வேறு பெயர்கள் உண்டு. பொதுவாக வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வளரும் தன்மையைக் கொண்டது. இதன் இலைகள், வேர், மலர், கனி என முழுத் தாவரமும் பயன் தரும். கரும்பச்சை நிறத்தில், ஊதா நிற பூக்களுடன் இருக்கும். 
ஆஸ்துமாவிற்கு மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.:

spinach

தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர சளி, காது மந்தம், காது எழுச்சி, காது குத்தல், உடம்பு எரிச்சல், தேக குடைச்சல் ஆகிய அனைத்தும் குணமாகும்.:
தூதுவளைக் கீரையை பசு வெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி தயாரித்த நெய் காச நோய், மார்புச் சளி ஆகிய அனைத்தையும் குணப்படுத்தும்.
தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி புகை பிடிப்பது போல செய்து வர, இரைப்பு இருமல், மூச்சுத் திணறல், சளி போன்றவை அகலும்.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து உடன் நெய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகி வஜ்ரம் போல இருக்கும்.
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.
தூதுவளை இலையைப் பறித்து நன்கு அலசி வெற்றிலையுடன் கலந்து இரண்டையும் காலையில் மென்று தின்றால் சளி மறைந்து விடும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.
தூதுவளைக் காயை ஊறுகாய் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குணமாகும்.
தூதுவளை பூவை நெய்யில் வதக்கி தயிருடன் சாப்பிட விந்து கட்டும், அது மட்டும் அல்லாமல் அறிவும் விருத்தியாகும்.

thuthuvalai

தூதுவளை அற்புதமான உடல் தேற்றி இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர சீக்கிரத்தில் முதுமை வராது. முதுமை காரணமாக வாடுபவர்கள் கூட இதனை தினசரி உண்டு வர இழந்த சக்தி திரும்பக் கிடைக்கும்.
தூதுவளை இலைச் சாற்றைக் காதில் பிழிய காதடைப்பு, காதெழுச்சி முதலிய நோய்கள் குணமாகும்.
பருப்புடன், தூதுவளை இலை சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட மகோதரம், கர்ணசூலை ஆகியவை குணமாகும்.
தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுமே நீங்கும்.