துவாரகை சங்கராச்சாரியார் ஆர்.எஸ் எஸ்ஸை சும்மா கிழி…கிழி…கிழி!

துவாரகை சங்கராச்சாரியார் ஆர்.எஸ் எஸ்ஸை சும்மா கிழி…கிழி…கிழி!

இந்தியாவில் உள்ள மற்ற சங்கராச்சாரியார்களுக்கு இல்லாத ஒரு சிறப்புத் தகுதி இருக்கிறது ஸ்வரூபானந்த சரஸ்வதிக்கு. இவர் ஒரு சுதந்திரப்போராட்ட வீரர்.வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சிறைக்கும் சென்றிருக்கிறார். 96 வயதாகும் இந்த சங்கராச்சாரியார் பிஜேபியும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸும் கடந்த சில ஆண்டுகளாக இந்திய சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்த்து விட்டது என்று சொல்லி இருக்கிறார்.

துவாரகாபீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி பிஜேபி அரசின் மீதும் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் மீதும் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.

இந்தியாவில் உள்ள மற்ற சங்கராச்சாரியார்களுக்கு இல்லாத ஒரு சிறப்புத் தகுதி இருக்கிறது ஸ்வரூபானந்த சரஸ்வதிக்கு. இவர் ஒரு சுதந்திரப்போராட்ட வீரர்.வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சிறைக்கும் சென்றிருக்கிறார். 96 வயதாகும் இந்த சங்கராச்சாரியார் பிஜேபியும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸும் கடந்த சில ஆண்டுகளாக இந்திய சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்த்து விட்டது என்று சொல்லி இருக்கிறார்.

Mohan bagwat

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தையும் இவர் விடவில்லை. இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்களே என்று மோகன் பகவத் சொன்னதை விமர்சித்து இருக்கும் சங்கராச்சாரியார், அமெரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ வாழும் இந்துப் பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள் இந்துக்கள் இல்லையா என்று கேட்டிருக்கிறார். இந்துத் திருமண முறை என்பது ஒரு ஒப்பந்தம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்லி இருப்பதையும் மறுத்திருக்கும் சங்கராச்சாரியார், இந்து திருமணம் என்பது முழுப் பிறவிக்குமானது என்கிறார்.

ஆளும் பிஜேபி மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதைவிட காஷ்மீரை யூனியனின் பிரதேசமாக்குவது முக்கியமா, மக்களுக்கு தருவதாக சொன்ன அந்த பதினைந்து லட்சத்தை எப்போது தருவீர்கள் என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டுவிட்டு,வேதங்களைப் பின்பற்றி நடப்பவர்கள் இந்துக்கள். குரானை பின்பற்றி நடப்போர் இஸ்லாமியர், பைபிள் வழியில் போவோர் கிறிஸ்தவர்கள் அவ்வளவுதான் என்று சொல்லி இருக்கிறார்.
இந்துத்துவ ஆட்சியையையும்,அரசையும் இந்தியாவின் பழைமையான ஆறு பீடங்களில் ஒன்றான துவாதகா பீடத்தின் சங்கராச்சாரியாரே விமர்சித்து இருப்பது காவிகளின் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.