துல்கர் சல்மான் படம் பற்றிய சர்ச்சை தேவையற்றது! – கொளத்தூர் மணி கருத்து

 

துல்கர் சல்மான் படம் பற்றிய சர்ச்சை தேவையற்றது! – கொளத்தூர் மணி கருத்து

மலையாள நடிகர் துல்கர் சல்மானின் படத்தில் அவருடைய நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவமானப்படுத்திய செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார்

துல்கர் சல்மானின் படம் ஒன்றில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்துவிட்டார்கள் என்று சர்ச்சையைக் கிளப்புவது தேவையற்றது என்று கொளத்தூர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் துல்கர் சல்மானின் படத்தில் அவருடைய நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவமானப்படுத்திய செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு துல்கர் சல்மான், மலையாள பட இயக்குநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன் மன்னிப்பும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

varane-avasyamunde

இந்த நிலையில், புதிய சர்ச்சை குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். 
அதில், “அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை, அது குறித்த சர்ச்சையையும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அதே நேரம் சில விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். விடுதலைப் புலி இயக்கம் தமிழகத்தில் பிரபலமான பிறகே, ‘பிரபாகரன்’ என்ற பெயரைத் தமிழகம் அறியும். அதற்கு முன் அப்படியோர் பெயர் இருந்ததில்லை.. இருந்தாலும் மிக மிகக் குறைவானவர்களே வைத்திருப்பார்கள். இந்தப் பெயர், கேரளாவில்தான் பல காலமாகப் பிரபலம். அதாவது , மலையாளிகளே இப்பெயரை அதிகம் வைத்துக்கொள்வார்கள். ‘பிரபாகரன்’ என்ற பெயரை மட்டும் வைத்து, அவரை, ‘மலையாளி’ எனப் பிரச்சாரம் செய்த போட்டி இயக்கங்கள் இருந்தன.

PRBHAKARAN-78

தவிர, ஈழத்திலும் கேரளாவிலும் பல பழக்கங்கள் ஒன்று போல் இருக்கும். இரு இடங்களிலுமே, தாங்கள் மிக மதிக்கும் தலைவர்களின் பெயர்களை, நாய்க்குச் சூட்டும் வழக்கம் உண்டு. மேலும், அடையாளங்களை வைத்துக் கிளர்ந்தெழுவதோ, விவாதம் செய்வதோ எந்தவிதத்திலும் யாருக்கும் பயன் தராது. ஏதோ சிறிது நேரம் பொழுது போகும் அவ்வளவுதான். உண்மையில் ஈழ மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, போரினால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய முயல்வதுதான். அகதிகளாக அல்லலுறும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான்.

KOLATHUR-MANI-678

இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். ஈழப் போருக்குப் பிறகு, தங்களுக்குத் தமிழ் தேசிய உணர்வு வந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ளும் பலர், தமிழ்நாட்டை அடக்கி ஆளும், இந்திய (மத்திய) அரசின் மீது கோபம் கொள்வதில்லை: சாதியை வைத்து நம்மைப் பிரிக்கும் எதேச்சதிகார இந்தத்துவாவை எதிர்ப்பதில்லை. நம்மைப் போலவே அதிகாரங்கள் இன்றி தவிக்கும் சகோதர இனத்தைச் சாடுவதில் குறியாக இருக்கிறார்கள். திரைப்படத்தில் நாய்க்குப் பெயர் வைத்த விவகாரத்தை விவாதிப்பது ஏற்கெனவே சொன்னது போல, நேரத்தைப் போக்க உதவும்.. தங்களை வெளிப்படுத்திக்கொள்ள உதவும். இரண்டும் பயனற்ற செயல்” என்று கூறியுள்ளார்.