துல்கர் சல்மான் நடித்த மலையாளப் படத்தின் ரீமேக்கில் மாதவன்!

 

துல்கர் சல்மான் நடித்த மலையாளப் படத்தின் ரீமேக்கில் மாதவன்!

மாதவன் இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.கேரளாவைச் சேர்ந்த நாராயணன் நம்பி என்கிற ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானியின் வாழ்கையில் நடந்த சில மோசமான சம்பவங்களின் பின்னணியில் அமைந்த கதை அது.’ ராக்கெட்ரி’ தி நம்பி எஃபக்ட் எனப் பெயர் இடப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை மாதவன் இப்போது இயக்கி வருகிறார்

மாதவன் இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.கேரளாவைச் சேர்ந்த நாராயணன் நம்பி என்கிற ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானியின் வாழ்கையில் நடந்த சில மோசமான சம்பவங்களின் பின்னணியில் அமைந்த கதை அது.’ ராக்கெட்ரி’ தி நம்பி எஃபக்ட் எனப் பெயர் இடப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை மாதவன் இப்போது இயக்கி வருகிறார்.

madhavan

தமிழ்,மலையாளம் , இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிவரும் இந்தப் படத்தை முடித்ததும் மாதவன்  அடுத்து நடிக்க இருப்பது மம்முட்டியின் மகன் துல்ஹர் சல்மான் நடித்த சார்லி என்கிற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். சார்லி 2015 ரிலீசான போதே பரவலான கவனம் பெற்றது.ஏற்கனவே மராட்டியில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் இதம் வித்தியாசமான கதையும்,அந்தக் கதையில் வரும் வினோதமான கதாபாத்திரங்களும்.பெற்றோர் பார்த்த பையனை மணக்க விரும்பாத டெஸா ( பார்வதி ) வீட்டை விட்டு வெளியேறி ஒரு அறையில் தங்குகிறாள்.

chrlie

அந்த அறையில் அதற்கு முன்னால் தங்கியிருந்த சார்லி என்பவன் விட்டுச் சென்ற ஒரு ஸ்கெட்ச் நோட்டும்,அவனை அதிந்தவர்கள் சொல்லும் கதைகளையும் கேட்டு வசீகரிக்கப்படும் டெஸா , சார்லியைத் தேடிக் கிளம்புகிறாள்.வழியில் எதிர்ப்படும் சார்லியின் தந்தை,அவனால் கைப்பற்றப்பட்ட ஒரு பெண்,அவனது நண்பனான ஒரு திருடன் , 40 வருடங்களாக காதலிக்காக காத்திருக்கும் ஒரு கிழவன் என்று விதவிதமான பாத்திரங்களூடே கதை சொல்லி,திருச்சூர் பூரத்தில் சார்லியும் டெஸாவும் சந்திப்பில் படம் முடிகிறது

charlie

. கேரள அரசின் சிறந்த படத்திற்கான விருதை வென்ற இந்தப் படத்தை இயக்கியவர் மார்ட்டின் பிரகாட்.திரைக்கதை பிரகாட்- உன்னி. இந்த படத்தின் உரிமையை வாங்கி இருக்கும் மாதவனே இதைத் தமிழிலும் இந்தியிலும் இயக்கி நடிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.