துல்கருக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி?

 

துல்கருக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி?

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் நடிக்கும் குஞ்சன் சக்சேனாவின் பயோபிக் படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் நடிக்கும் குஞ்சன் சக்சேனாவின் பயோபிக் படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் பெண் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றிய குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரண் ஜோகர் தயாரிப்பில் ஹெலிகாப்டர் பைலட்டாக நடிக்கவிருக்கும் ஜான்வி, அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

gunjansaxena

இப்படத்தில் ஜான்வி கபூர் காதலிக்கும் காதலராக தென்னிந்திய நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. இப்படத்தின் கதை ஜான்வி கபூரை சுற்றியே இருக்கும் என்றும், ஜான்வியை காதலிப்பவராக துல்கர் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. பாலிவுட்டில் துல்கர் நடித்த ‘கர்வாண்’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதையடுத்து ஜான்வி கபூருடன் துல்கர் இணையும் படம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.