துறையூர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம்: பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர் அறிவிப்பு!

 

துறையூர்  விபத்தில்  பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம்:  பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர் அறிவிப்பு!

பலியானவர்களின் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

துறையூர்  விபத்தில்  பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம்:  பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர் அறிவிப்பு!

துறையூர்: திருச்சி துறையூர் அருகே மினிவேன் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு  தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என  பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த எஸ்.எஸ்.புதூரில் சரக்கு வாகனம் ஒன்றில் 22 பேர் பயணித்துள்ளனர். கறி  விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்த அவர்களின் வாகனத்தில் திடீரென்று டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை அருகே இருந்த  நீரில்லாத கிணற்றுக்குள் கவிழ்ந்தது.இந்த விபத்தில் 8 பேர் பலியான நிலையில் 9 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

paari

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களைப் பேரூர் கிராமத்திற்குச் சென்று நேரில் சந்தித்த  பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர் , உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு  தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியதோடு  முன் பணமாக தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கினார். மேலும் பலியானவர்களின் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அதேபோல்  படுகாயம் அடைந்தவர்களை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதாகவும் உறுதியளித்தார்.

sec

முன்னதாக துறையூர்  விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்குத்  தமிழக அரசு சார்பில் ரூ. 2லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.