துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸால் சீனாவில் ஏற்பட்ட துயரம்

 

துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸால் சீனாவில் ஏற்பட்ட துயரம்

துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸை நுகர்ந்து பார்த்த ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ள துயர சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது

பீய்ஜிங்: துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸை நுகர்ந்து பார்த்த ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ள துயர சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.

துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸால் ஏற்படும் பிரச்னை அடிக்கடி ஏற்படும் நிகழ்வு. இதனால், பல நேரங்களில் அசௌகரியான சூழல் உருவாகிவிடுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு, துர்நாற்றம் அடிக்கும் கால்களால் பொது இடத்தில் தொல்லை ஏற்படுத்தினார் என்று டெல்லியில் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸை நுகர்ந்த ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ள துயர சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.

சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், வேலை முடிந்து தினமும் வீடு திரும்பியதும், காலில் அணியும் சாக்ஸை முகர்ந்து பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்துள்ளார். அவருடைய கால் வியர்வையாக இருந்ததால், சாக்ஸில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. அதனை அவர் முகர்ந்தபோது, அவருக்கும் அந்த பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு, அது நுரையீரலைத் தாக்கியுள்ளது. இது தொடர்பான மருத்துவ அறிக்கையில், துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ் உயிரைக் கொல்லக் கூடிய அளவுக்கு பயங்கரமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாக்ஸில் துர்நாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலான துணி வகைகள் தற்போது கடைகளில் கிடைக்கின்றன. அத்தகைய, சாக்ஸ் அணியும்போது இத்தகைய பிரச்னைகளை தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.