துர்கா பூஜையில் 4 வயது முஸ்லிம் சிறுமியை கடவுளாக வழிபட்ட கொல்கத்தா குடும்பம்

 

துர்கா பூஜையில் 4 வயது முஸ்லிம் சிறுமியை கடவுளாக வழிபட்ட கொல்கத்தா குடும்பம்

துர்கா பூஜையின் ஒரு பகுதியான குமாரி பூஜை சடங்கில் 4 வயது பாத்திமா என்ற முஸ்லிம் சிறுமியை கொல்கத்தாவை சேர்ந்த குடும்பத்தினர் கடவுளாக வழிபட்டனர்.

துர்கா பூஜை புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையில் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகத்தில் நவராத்திரி என்ற பெயரில் நாம் கொண்டாடுவதைதான் மேற்கு வங்க இந்துக்கள் துர்கா பூஜையாக கொண்டாடப்படுகின்றனர். இந்த துர்கா பூஜை நாம் கொண்டாடும் நவராத்திரியை விட கொஞ்சம் ஸ்பெஷலானது. இந்த பண்டிகை வந்து விட்டாலே மேற்கு வங்கமே களைகட்டி விடும். ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருக்கும்.

சிறுமி பாத்திமா

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழாவில் மகாஅஷ்டமியன்று நடைபெறும் குமாரி பூஜை நிகழ்வு மிகவும் சிறப்பானது. குமாரி பூஜை என்பது துர்கா தேவியின்  வழிபாட்டின் பொதுவான வடிவமாகும். சிறுமிகள் தெய்வத்தின் அடையாளமாக வணங்கப்படுகிறார்கள். அதாவது சிறுமியை கடவுளாக பூஜித்து வழிபடுபவர். இந்த ஆண்டு உத்தர பிரதேசத்தின் பதேபூர் சிக்ரியிலிருந்து 4 வயதான பாத்திமா என்ற முஸ்லிம் சிறுமியை கொல்கத்தாவுக்கு அழைத்து வந்த தமல் தத்தா குடும்பத்தினர் தங்களது வீட்டில் அந்த சிறுமியை  தெய்வமாக வழிப்பட்டனர்.

சிறுமி பாத்திமாவை கடவுளாக வழிபடும் குடும்பத்தினர்

120 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம் படகோட்டியின் மகளை கடவுளாக வழிபட்டுள்ளார் அதனால் முஸ்லிம் சிறுமியை கடவுளாக வழிபடுவது ஒன்றும் புதியது அல்ல என தமல் தத்தா தகவல் தெரிவித்தார். சிறுமியை தெய்வமாக வழிப்படும் வழக்கம் வடமாநிலத்தில் பிரபலம்.