துரோகத்தின் பக்கம் செல்லமாட்டோம் என எம்.எல்.ஏக்கள் கூறியிருக்கிறார்கள்: டிடிவி தினகரன் அதிரடி

 

துரோகத்தின் பக்கம் செல்லமாட்டோம் என எம்.எல்.ஏக்கள் கூறியிருக்கிறார்கள்: டிடிவி தினகரன் அதிரடி

துரோகத்தில் பக்கம் செல்லமாட்டோம் என ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூறியிருக்கின்றனர் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மதுரை: துரோகத்தில் பக்கம் செல்லமாட்டோம் என ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூறியிருக்கின்றனர் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வெளியான தீர்ப்பு டிடிவி தரப்புக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அவர்கள் அனைவரும் கடும் விரக்தியிலும் தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தீர்ப்பை எதிர்த்து தினகரன் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளனர். 

இதற்கிடையே 18 எம்.எல்.ஏக்களும் மீண்டும் அதிமுகவில் இணைய வருமாறு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தனர். ஏற்கனவே தினகரன் மேல் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் எம்.எல்.ஏக்கல் அதிமுகவுக்கு மீண்டும் செல்லும் மனப்பான்மையில் இருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக இந்த ஆட்சி கவிழும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். 18 எம்.எல்.ஏக்களின் நலனும், கட்சியின் நலனும், தமிழக மக்களின் விருப்பமும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே. எனவே 18 பேரும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் 90% பேர் எங்களிடம் உள்ளனர். இந்த நிலையில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுக-வுக்கு திரும்ப வேண்டும் என்று முதல்வரும், துணை முதல்வரும் அழைப்பு விடுத்துள்ளனர். இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டது போல் உள்ளது. நாங்கள் துரோகத்தின் பக்கம் செல்ல மாட்டோம் என ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர். 24 தொகுதிகளில் தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். ஒரு தொகுதியில் கூட ஆளும் கட்சி டெபாசிட் பெறாது என்றார்.