துரைமுருகன் சிரிப்புக்காக எதையாவது சொல்வார்! நக்கலடித்த அமைச்சர் காமராஜ்

 

துரைமுருகன் சிரிப்புக்காக எதையாவது சொல்வார்! நக்கலடித்த அமைச்சர் காமராஜ்

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தி பொதுமக்களை கொச்சைப்படுத்தி உள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கிராம சபை கூட்டம் நடத்திய ஸ்டாலின் மீது குற்றமா அல்லது கொரோனா காலத்தினால் கூட்டத்தை ரத்து செய்தது தமிழக அரசின் சட்ட விரோதமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

துரைமுருகன் சிரிப்புக்காக எதையாவது சொல்வார்! நக்கலடித்த அமைச்சர் காமராஜ்

கிராம சபை கூட்டம் என்பது அந்தந்த கிராம மக்கள் கலந்துகொண்ட கூட்டமாக இதுவரை நடந்து கொண்டு வந்தது. அதில் வேறு ஒரு நபராக எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டு கூட்டத்தை கொச்சைப்படுத்தி உள்ளார். ஸ்டாலின் செய்தது சட்டத்திற்கு புறம்பானது. தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்தது. காடு மேடுகள் என அனைத்து பகுதிகளிலும் குறுவை சாகுபடியில் விளைச்சலை விவசாயிகள் பார்த்து வருகின்றனர். நெல் கொள்முதலில் ஈரப்பதம் என்பதே பெரிய பிரச்சனையாக உறுமாறாது, இருப்பினும் விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சனை இல்லாமலும் நெல் கொள்முதல் செய்யப்படும், தேவைக்கேற்ப ஒரே இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது” எனக் கூறினார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறிய கருத்திற்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ்., துரைமுருகன் சிரிப்புக்காக எதையாவது சொல்வார் திட்டத்தில் எந்த பிரச்சனையும் கிடையாது என பதிலளித்தார்