துருவ் விக்ரம் பாடியுள்ள ‘எதற்கடி’ பாடல் டீஸர் வெளியானது! 

 

துருவ் விக்ரம் பாடியுள்ள ‘எதற்கடி’ பாடல் டீஸர் வெளியானது! 

சென்னை: ஆதித்ய வர்மா படத்தில் இடம்பெற்றுள்ள எதற்க்கடி பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்த விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படம் தமிழில்  ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக்கியுள்ளது. துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க அர்ஜுன் ரெட்டி பட துணை இயக்குநர் கிரீசாய இயக்கியுள்ளார். இதில் துருவுக்கு ஜோடியாகப் பனித்தா சந்து மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து எதற்கடி என்ற பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

அந்த பாடலை விவேக் எழுத, துருவ் விக்ரம் பாடியுள்ளார். அந்த பாடலின் டீஸர் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த படம் அடுத்த மாதம் 27ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.