துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?

 

துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?

நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா திரைப்படத்தின் டீஸர் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா திரைப்படத்தின் டீஸர் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தைத் தமிழில் ‘வர்மா’ என்ற தலைப்பில் இயக்கினார். சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்த அப்படம் தயாரிப்பாளருக்குத் திருப்தி தராததால் படம் அப்படியே தூக்கி குப்பையில் வீசப்பட்டது. 

துருவ் விக்ரம்

அதைத் தொடர்ந்து இதை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் உதவியாளர் கிரீஸய்யா மீண்டும் இந்த படத்தை ஆதித்ய வர்மா என்று பெயரில் இயக்கியுள்ளார். இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துத்திருக்கிறார். அதுமட்டுமின்றி முக்கிய வேடத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் ரீ- ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் வருன் ஜூன்.16ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.