துருவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

துருவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வர்மா திரைப்படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

சென்னை: வர்மா திரைப்படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தமிழில் இப்படத்தைப் பாலா ‘வர்மா’ என்ற டைட்டிலில் இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தி தராததால் இப்படத்தை தயாரித்த இ4 என்டர்டெயின்மென்ட் கைவிட்டதாகச் சமீபத்தில் அறிவித்தது. மேலும் துருவ் விக்ரமை வைத்து மீண்டும் இப்படத்தை வேறு புதிய படக்குழுவுடன் உருவாக்கவுள்ளதாக என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

banita sandhu

இந்நிலையில், இப்படத்தின் புதிய இயக்குநர், நாயகி, இதர கதாப்பாத்திரங்களுக்கான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்டமாக வர்மா படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கவிருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

துருவ், பனிதா சாந்து நடிக்கவிருக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ ரீமேக் படத்திற்கு புதிய டைட்டில் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இம்மாத இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.