துருப்பிடித்த மூடியுடன் கூடிய இருமல் மருந்து! அரசு மருத்துவமனையின் அவலம்… 

துருப்பிடித்த மூடியுடன் கூடிய இருமல் மருந்து! அரசு மருத்துவமனையின் அவலம்… 

துருப்பிடித்த மூடியுடன் கூடிய இருமல் மருந்தை வழங்கிய பவானிசாகர் அரசு மருத்துவமனை ஊழியர்களுடன், குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து வந்த தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

துருப்பிடித்த மூடியுடன் கூடிய இருமல் மருந்தை வழங்கிய பவானிசாகர் அரசு மருத்துவமனை ஊழியர்களுடன், குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து வந்த தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஈரோடு மாவட்டம் பவானிசாகரைச் சேர்ந்த சபீதா என்பவரின் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவரின் அறிவுரைப்படி குழந்தைக்கு இருமல் மருந்து வழங்கப்பட்டுள்ளது. 

இருமல் மருந்தை வாங்கிய சபீதா, வீட்டிற்குச் சென்று அதனைத் திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். பாட்டிலின் மூடிப்பகுதி துருப்பிடித்து சேதமடைந்திருந்ததோடு, அதன் துகள் மருந்து பாட்டிலுக்குள்ளும் ஒட்டிக் கொண்டிருந்திருக்கிறது. இதைப்பார்த்து ஆத்திரமடைந்த சபீதா,  மருந்தகத்திற்குச் சென்று மருந்து கொடுத்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்த நோயாளிகள், மருந்து மட்டுமின்றி வேறு சில பிரச்னைகளும் பவானிசாகர் அரசு மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்தனர். துருப்பிடித்த மூடியுடன் கூடிய இருமல் மருந்து பாட்டிலைக் கொடுத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பவானிசாகர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதியளித்துள்ளனர்.