துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 26 பேர் பலி

 

துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 26 பேர் பலி

துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 26 பேர் உயிரிழந்தனர்.

டமாஸ்கஸ்: துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 26 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் போர் உச்சத்தை அடைந்துள்ளதால் அந்நாட்டின் வடகிழக்கு பகுதியான இட்லிப் மாகாணத்தை கிளர்ச்சியாளர்களிடமிருந்து கைப்பற்றும் நோக்கில் சிரிய பாதுகாப்பு படையினர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இந்தப் போரில் சிரியாவுக்கு ரஷிய படைகளும், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி அரசும் ஆதரவு கொடுக்கின்றன. அத்துடன் சிரியாவின் எல்லைக்குள் துருக்கி தனது ராணுவத்தை குவித்து வைத்துள்ளது.

ttn

இதற்கிடையில், கடந்த 27-ஆம் தேதி ரஷியாவின் ஆதரவு பெற்ற சிரிய படைகள் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து இட்லிப் பகுதியில் நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 34 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று துருக்கி படைகள் நடத்திய தாக்குதலில் 17 சிரிய படையினர் பலியாகினர். இந்நிலையில், சிரியாவின் இட்லிப் மற்றும் அலிப்போ மாகாணங்களில் ஆளில்லா விமானம் மூலம் துருக்கி இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த வான்வெளி தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையை சேர்ந்த 26 பேர் உயிரிழந்தனர்.