துருக்கியில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்; கட்டிடங்கள் தரைமட்டம் – 21 பேர் பலி!

 

துருக்கியில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்; கட்டிடங்கள் தரைமட்டம் – 21 பேர் பலி!

துருக்கியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் தரைமட்டமானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

இஸ்தான்புல்: துருக்கியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் தரைமட்டமானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

நேற்றைய தினம் இரவு துருக்கியின் கிழக்குப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தலைநகரமான அங்காராவில் இருந்து சுமார் 750 கி.மீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானது. மேலும் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக நிலநடுக்கம் பதிவானது. இதன் தாக்கம் அருகில் உள்ள 4 மாகாணங்களிலும் நன்றாக உணரப்பட்டது.

turkey

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் எலாஜிக் மற்றும் மலாத்யா மாகாணங்களில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதனால் அந்த கட்டிடங்களில் வீடுகளில் வசித்த மக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். எஞ்சியிருந்தவர்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து தேசிய மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்னளர்.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழுவேகத்தோடு நடந்து வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் ஏராளமான பொருள் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.