துருக்கியில் காதலரை கரம்பிடித்த மேற்குவங்க எம்.பி!

 

துருக்கியில் காதலரை கரம்பிடித்த மேற்குவங்க எம்.பி!

மேற்கு வங்க மாநில எம்.பி நுஸ்ரத் ஜஹான், தனது காதலரை நேற்று கரம் பிடித்துள்ளார். 

துருக்கி: மேற்கு வங்க மாநில எம்.பி நுஸ்ரத் ஜஹான், தனது காதலரை நேற்று கரம் பிடித்துள்ளார். 

பிரபல வங்காள நடிகை நுஸ்ரத் ஜஹான். முன்னணி நடிகைகளுள்  ஒருவராக வலம்வந்த இவர் மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஷிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

 

இந்நிலையில் நுஸ்ரத் ஜஹான் நீண்ட நாள் காதலரான பிரபல தொழிலதிபர்  நிகில் ஜெயினை துருக்கியில் உள்ள போட்ரம் என்ற இடத்தில்  நேற்று திருமணம் செய்து கொண்டார். இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமணம் காரணமாக நுஸ்ரத் இன்னும் எம்,பியாக பதவியேற்றுக் கொள்ளவில்லை. 

mp

முன்னதாக  , திரிணாமுல் கட்சி சார்பாக களமிறக்கப்பட்ட மிமி சக்ரபோர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜஹான் நாடாளுமன்றத்திற்கு பேண்ட் சர்ட் அணிந்து சென்றது விமர்சனத்திற்குள்ளானது.