துயர வீட்டில் அரசியல் நடத்துவது கேவலமான பிழைப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்!

 

துயர வீட்டில் அரசியல் நடத்துவது கேவலமான பிழைப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்!

துயர வீட்டில் அரசியல் நடத்துவதை விட கேவலமான பிழைப்பு வேறெதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி: துயர வீட்டில் அரசியல் நடத்துவதை விட கேவலமான பிழைப்பு வேறெதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில், 1 கோடி ரூபாய் மதிப்பில், உள்நோயாளிகள் பிரிவை பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

ponradhakrishnan

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பெட் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் வராந்தாவில் தங்கியிருப்பார்கள். அதற்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக, புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்பட வேண்டும். காலத்தின் தன்மைக்கேற்ப நாம் மாறாமல் இருந்தால் பின் தங்கிவிடுவோம். நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக ஆக்க வேண்டும். நாளைய வளர்ச்சிக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். குமரி மாவட்டத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அமைச்சர் நட்டாவிடம் பேசியுள்ளேன். இயற்கை காப்பாற்றப்பட்டே ஆக வேண்டும். முன்னேற்றத்துடன்கூடிய இயற்கை அழகை நாம் ஏற்படுத்த முடியும்’ என்று கூறினார்.

ponradhakrishnan

அப்போது, கஜா புயலால் லட்சக்கணக்கானோர் இறந்தால் பிரதமர் தமிழகம் வருவார் என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு, துயர வீட்டில் அரசியல் நடத்துவதை விட கேவலமான பிழைப்பு வேறெதுவும் கிடையாது’ என காட்டமாக தெரிவித்தார்.